அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கான மதிப்பீட்டிலிருக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகளுக்கு, அடுத்த சில வாரங்களில் உரிமம் வழங்கப்படும் என சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு குளிர் சங்கிலி உபகரணங்களான, 'வாக்-இன் கூலர்ஸ்', 'டீப் ஃப்ரீசர்ஸ்', 'ரீபர் ட்ரக்குகள்' டிசம்பர் 10 முதல் கூடுதலாக விநியோகிக்கப்படும். தற்போது, இந்தியா 30 மில்லியன் மக்களுக்கான கரோனா தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் குளிர் சங்கிலித்தொடர் உட்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த, 30 மில்லியன் நபர்களில், சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களும் முன்களச் செயல்வீரர்களும் அடங்குவர்.