Skip to main content

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு... ஒன்று திரளும் எல்.ஐ.சி ஊழியர்கள்...

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற எல்.ஐ.சியின் பங்குகள் விறக்கப்படுவது குறித்த முடிவுக்கு எதிராக எல்.ஐ.சி யின் மூன்று பெரிய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.

 

lic union workers against issuing ipo on lic

 

 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது, எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக எல்.ஐ.சி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி திங்களன்று மதிய உணவு இடைவேளையின் போது தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் எனவும், அதன் பின்னர் செவ்வாயன்று ஒரு மணி நேர எதிர்ப்பு வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு அதிகரிப்பு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

LIC Intrinsic Value Increase!

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ள நிலையில், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5% பங்குகளை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த மத்திய அரசு, அதன் மூலம் 21,000 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. கடந்த மே 17- ஆம் தேதி ரூபாய் 875- க்கு விற்பனையான எல்.ஐ.சி.யின் பங்குகள், ஜூலை மாதம் 15- ஆம் தேதி 708 ரூபாயாக, அதாவது 19% விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 4,50,434 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,39,686 கோடி ரூபாயாக இருந்து கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5,41,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்புடன் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பைக் கூட்டுவதன் மூலம் அதன் உள்ளார்ந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. எல்.ஐ.சி.யின் புதிய வணிகத்தின் மதிப்பு கடந்த 2020- 21ல் 4,167 கோடி ரூபாயாக இருந்து, 2021- 22ல் 7,619 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் விலை குறைந்தாலும், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்து வருவது, அதன் லாப விகிதம் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது.

 

Next Story

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை பங்குச்சந்தைகளில் தொடக்கம்! 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

LIC Stock sales start in the stock market!

 

எல்.ஐ.சி. பங்குகள் 8% சரிவுடன் விற்பனைக்கு வந்ததால், அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யில் 3.5% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது. ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீடு முறையில் பங்கு விற்பனை நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று (17/05/2022) முதல் எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் பங்குச்சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. 

 

மும்பை பங்குச்சந்தை வர்த்தக தொடக்கத்தில் மணியடித்து, பங்குகள் விற்பனை தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் பங்கு ஒன்றின் விலை 867 ரூபாய்க்கு தொடங்கியது. இது வெளியீட்டு விலையை விட 8.62% குறைவாகும்.