புல்வாமா தாக்குதல்; கணவனை இழந்த பெண்ணின் நெகிழ்ச்சி கவிதை...

gjghjhgj

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் விபுதி சங்கர் தவுன்டியால் உள்பட 4 வீரர்கள் பலியாகினர். மேலும் அந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான விபுதி சங்கர் தவுன்டியாலின் மனைவி நிகிதா, தனது கணவர் விபுதி சங்கருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தனது கணவனையும், அவரது காதலையும், இந்த நாட்டிற்கான அவரது செயலையும் குறிப்பிடும் வகையில் மனதை கரைக்கும் அந்த கவிதை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அவரால் எழுதப்பட்ட அந்த கவிதை...

என்னிடம் பொய்யுரைத்துவிட்டாய்

'நிகிதா உன்னைக் காதலிக்கிறேன்' என..

சொல்லப்போனால் என்னைவிட

நீ அதிகம் காதலித்தது நாட்டைத்தான்...

எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது

ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

மக்களுக்காகவே உன் வாழ்க்கையை

தியாகம் செய்துவிட்டாய்..!

உறுதியான இதயம் கொண்டவன் நீ..

உன்னை என் கணவனாக பெற்றதில்

பெருமை எனக்கு..

நீ என்னை விட்டுச் சென்றது

அத்தனை வலிக்கிறது..

ஆனால் எனக்குத் தெரியும்

இறுதி வரை என்னுடன்தான் இருப்பாய்..

என் கடைசி மூச்சு வரை

உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்..

ஐ லவ் யூ விபு!

hgjghjhgjg

விபுதி சங்கரின் மனைவியின் இந்த கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

pulwama attack
இதையும் படியுங்கள்
Subscribe