Advertisment

“அவங்களை ஏன் தடுக்குறிங்க”...பாதுகாப்பு அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட ராகுல் 

publive-image

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி துவக்கி வைத்தார். தமிழகத்தில் தன் நடைபயணத்தை முடித்து தற்போது கேரளாவில் தனது நடைபயணத்தை துவங்கியுள்ள ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் கட்சியின் தலைவர்கள் தான் போட்டியிடும் தொகுதியில் அங்கு இருக்கும் பாமர மக்களிடம் போய் புகைப்படம் எடுத்துக் கொள்ளுவது நடைபெறும். மேலும் தேர்தலுக்கு தங்கள் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் பொருட்டும்நடைபயணங்களை மேற்கொள்ளுவதும் நடைபெறும். ஆனால் தேர்தல் நேரமும் இதுவல்ல. தன் கொள்கையை மக்களிடம் சேர்க்க வேண்டிய கட்டாயமும் ராகுலுக்கு இல்லை. எனினும் தான் மேற்கொண்ட பாரத் ஜூடோ யாத்திரையில் மக்களை சந்திப்பதும் அவர்களின் குறைகளை கேட்டறிவதும் ராகுல்வழக்கமாக வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று கேரளாவில் நடைபயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு இருந்த போது கூட்டத்தில் ஓடி வந்த வயது முதிர்ந்த பெண் ஒருவர் ராகுலை கட்டி அணைத்து அவருக்கு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பிடித்து பின்னால் இழுக்க ராகுல் காந்தி அவரை விடுமாறு கூறி அவரை தன்னுடன் சிறிது தூரத்திற்கு தன்னுடன் அவரை அழைத்துச் சென்றார்.

இந்நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் தந்தையை போலவே மகனும் உள்ளார் என புகழுகின்றனர்.ராகுல் காந்தியும் வயதானஎளியமக்களிடம் போய் ஆசிகளை பெறுவதும் நலன் விசாரிப்பதும் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kerala congres
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe