Less than one lakh corona case in India for the second day!

இந்தியாவில் இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 2.90 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய சுகாதாரத்துறை இன்று (09.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,90,89,069 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில்92,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் ஒரேநாளில்1,62,664 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,75,04,126 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.55 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,219 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.53 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு 12,31,415 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.