பெண்ணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்பதை உணர்ந்த லெஸ்பியன் ஜோடி தற்கொலை செய்துகொண்டுள்ளது.

Suicide

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஆஷா தாகூர் (வயது 30). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து, மேக்னா (வயது 3) என்ற மகள் இருந்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாவ்னா தாகூர் (வயது 28) என்ற பெண்ணுடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பணிபுரியும் இடத்தில் இவ்விருவரும் பழகிய நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் தங்கள் காதலை கொண்டாடினாலும், அவர்களால் சமூகத்தில் சுதந்திரமாக அதை வெளிக்காட்ட முடியவில்லை.

இதனால் விரக்தியடைந்த அந்த ஜோடி, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு சென்று முதலில் சிறுமி மேக்னாவை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளனர். பின்னர் இருவரும் துப்பட்டாவால் தங்களை ஒன்றாகக் கட்டிக்கொண்டு நீருக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Advertisment

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அருகில் உள்ள சுவரில் அவர்கள், இந்த உலகைவிட்டு பிரிந்தால் மட்டுமே எங்களால் ஒன்றிணைந்து வாழமுடியும். இந்த உலகம் எங்களை சேர்ந்துவாழ விடவேயில்லை என எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.