ஐஎப்எஸ் அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று காண்போருக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ''காடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், சாலையில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தில் இருப்பவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அப்போது சாலையின் ஓரத்தில் இருக்கும் புதரில் ஒரு சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்தது. அந்த சிறுத்தை சாலையை கடந்து சென்ற பிறகு செல்லலாம் என அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

Advertisment

அப்போது திடீரென சிறுத்தை தன்னை அந்த புதருக்குள் மறைக்க தொடங்கியது. அந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கடந்து, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சென்றது. அதில் இரு இளைஞர்கள் இருந்தனர். அதை கவனித்த சிறுத்தை அந்த இளைஞர்களைக் குறிவைத்துப் பாய்ந்தது. ஆனால் நூலிழையில் இளைஞர்கள் இருவரும் தப்பினர்.உடனே அந்த இருசக்கர வாகனம் வேகமாக சென்றது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.