h

தெலுங்கானா மாநிலத்தில் வனத்துறை அதிகாரிகளை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் தோட்டப்பயிர்களுக்கு புகழ்பெற்ற பகுதி. அனைத்து வகையான தோட்டப்பயிர்களும் இங்கு விளைவிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த பகுதியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகளால் சிக்கல் வந்துள்ளது.

Advertisment

Advertisment

இரவு நேரங்களில் நிலத்திற்கு வரும் காட்டுப்பன்றிகள் நிலத்தில் இருக்கும் பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் அதிர்ச்சி அடந்த அந்த விவசாயி பன்றிகள் நிலத்தை சேதப்படுத்தாமல் இருக்க சுருக்கு வலைகளை விரித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வயலை வந்து பார்த்த விவசாயிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலையில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்தது. இதனால் விவசாயி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத வகையில், வனத்துறை அதிகாரிகள் இருவரை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பி ஓடியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.