
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (07/03/2022) நடைபெறுகிறது.
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆறு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி, காஜிபூர், மிர்சாபூர் உள்பட ஒன்பது மாவட்டங்களில் உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் 2.06 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ச்கஞ்ச், துத்தி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 04.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 10- ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், அன்றே அறிவிக்கப்பட உள்ளன.