Advertisment

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்

Legendary Telugu actor Krishna passed away

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார்.உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரைமாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.

cinema telugu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe