leaders pray for modi mother health issue

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் ஹீராபென் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது தாயாரை சந்திக்க அகமதாபாத் சென்றார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாய் விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களின் தாயாரின் உடல்நிலை குறித்து மிகவும் கவலை அடைகிறேன். மேலும் அவர் விரைவில் குணமடைய விழைகிறேன்." என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “மோடி அவர்களின் அன்னை ஹீராபென் மோடி பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சேதனது ட்விட்டர் பதிவில், "எனது நண்பரான மோடியின் தாயார் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்பிரதமரின் தாயார் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.