Lawyers involved in a fight for a client in uttar pradesh

Advertisment

விற்பனை வரி அலுவலகத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களுக்காக வழக்கறிஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் விற்பனை வரி அதிகாரிகள் குழுவின் நடவடிக்கையால் சிக்கிய லாரி ஒன்றை விடுவிப்பது தொடர்பாக லாரி ஓட்டுநரிடம் வழக்கறிஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பெண் வழக்கறிஞர் ஒருவர் அந்த வழக்கை கையாள அந்த லாரி ஓட்டுநரிடம் பேச முயன்றுள்ளார். இதனால், இரு வழக்கறிஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விற்பனை வரி வழக்கறிஞர்களான அந்த பெண்ணும், மற்ற வழக்கறிஞரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில், ஒரு ஆணின் சட்டைக் காலரை பெண் வழக்கறிஞர் பிடித்து இழுத்து வருகிறார். அதன் பின்னர் பெண் வழக்கறிஞர், ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதில் கோபமடைந்த அந்த நபர், பெண் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கினார். அப்போது, அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது, அந்த நபரின் நண்பர்கள் அவரது கழுத்தைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். இந்த மோதலில், பெண் வழக்கறிஞருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல்துறை இந்த விஷயத்தில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காசியாபாத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் போலீசில் புகார் அளித்தர். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.