PINARAYI VIJAYAN

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதனைத் தொடந்து, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பினராயி விஜயன் வருகிற 20ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாககேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனோடுசேர்த்து 12 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இடம்பெறவுள்ளதாகவும், மீதமுள்ள இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்குவழங்கப்படவுள்ளதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இதனிடையே கடந்த முறை பதவியேற்பு விழாவை 40 ஆயிரம் மக்கள் நேரில் பார்த்ததாகவும், கரோனாகாரணமாக 500 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் எனவும் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கரோனா பரவல் அதிகமாகவுள்ள இந்த சூழ்நிலையில், 500 பேருடன் பதவியேற்பு விழா நடத்துவதை எதிர்த்து வக்கீல் ஒருவர் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குடிமக்களின் உயிரை காக்க, தானாக முன்வந்து கேரள அரசின் பதவியேற்பு விழாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.