இவர் சென்ற நவம்பர் 9 ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். தனது அண்டை வீட்டுக்காரர் தன் விவசாய நிலத்தில் வைக்கோலை எரிப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை இதற்கு எதிர்வினையாக, இர்ஷத் கானை போனில் அழைத்து மிரட்டியுள்ளது.
குறிப்பாக, ஒரு கட்டத்தில் போலீசார் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இர்ஷத் மீது வழக்குப்பதிவு செய்துவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் இர்ஷத் காவல்துறையிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு அவரது டுவிட்டர் கணக்கை முழுவதும் சோதித்த பிறகே காவல்துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் இரண்டு மணி நேரம் அவர் காவல்நிலையத்தில் இருந்துள்ளார்.
Follow Us