Advertisment

அம்பானி குடும்பம் பயணிக்க 50 தனியார் விமானங்கள்...

amb

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. முன்னதாக 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரு நாள்கள் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதய்ப்பூரில் மாளிகைகள் போல் காட்சியளிக்கும் அத்தனை பிரமாண்டமான ஹோட்டல்களும் மொத்தமாக அம்பானி குடும்பத்தினரால் புக் செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 தனியார் விமானங்கள் மூலம் அவர்களது மொத்த குடும்பமும் அங்கு செல்கிறது. மேலும் விருந்தினர்கள் விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு செல்ல சுமார் 1000 வெளிநாட்டு கார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியும், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

Rajasthan marriage mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe