Skip to main content

25 ரூபாய்க்கு திருப்பதி லட்டு... முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

ி


இந்த ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், அரசு அலுவலங்கள், கோயில்கள் முதலியன கடந்த 50 நாட்களாக மூடியிருந்தன. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகளால் படிப்படியாக அவைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
 


இதனால் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் திறக்கப்படவில்லை. திருப்பதி கோயில் திறக்கப்படாததால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் கூறிய நிலையில், லாக் டவுன் முடியும்வரை திருப்பதி லட்டை பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்குத் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்டு தற்போது மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தேவஸ்தானம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் லட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன் லைனில் புக் செய்து அருகில் உள்ள திருப்பதி தேவஸ்தான மண்டபங்களில் லட்டுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதிகலங்க வைக்கும் ஜட்டி திருடர்கள்; பயத்தில் உறைந்த மக்கள்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023
Infuriating Jatti Thieves; People frozen in fear

 

பல விதமான நூதன முறைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பிடிபட்டால் சிக்காமல் இருக்க உடலில் எண்ணெய்யை பூசிக்கொண்டு சில மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் மதுரையில் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

 

இந்நிலையில் ஆந்திராவில் திருப்பதி பகுதியில் ஜட்டியுடன் உலாவும் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜட்டி அணிந்தபடி உலாவும் சில நபர்கள் திருட்டில் ஈடுபடுவதாக போலீசருக்கு பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில், ஜட்டியுடன் சில நபர்கள் தங்கள் உடலில் டார்ச் லைட்டை  மாட்டியபடி நோட்டமிடுவது தெரியவந்தது.

 

அண்மையில் கார் ஷோரூமில் இந்த ஜட்டி திருட்டு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜட்டியுடன் சுற்றித் திரியும் அந்த நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு இருப்பதால் அடையாளம் காண்பது போலீசாருக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளைக் குறிவைத்து இவர்கள் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இலவச தரிசன டிக்கெட் ரத்து; ஒரு நாளுக்கு மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Cancellation of Free Darshan Tickets; Devotees who have been waiting for more than a day


புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் 87 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும் நான்கு கோடியே 5 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 லிருந்து 6 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.