தனியார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியை கடன் பாக்கியை இன்னும் செலுத்தாததால் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் காலக்கெடு கொடுத்திருந்தது.
இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ஆட் பியூரோ நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி தங்களது தரப்பு வாதத்தை நீதிபதிகளிடம் முன்வைத்தனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடன் பாக்கியான ரூ.80 லட்சத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன்? என லதா ரஜினிகாந்த் தரப்பினரிடம் கேட்டனர். மேலும் ஜூலை 10ஆம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதை மீறினால் பெங்களூருவில் ஆட் பியூரோ நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கில் லதா ரஜினிகாந்த் விசாரணையை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.