Advertisment

என்.டி ராமராவின் மகள் தற்கொலை

Late NTR’s daughter uma maheswari passed away

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி ராமராவின் மகளான உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ளார். என்.டி. ராமராவுக்கு ஹரிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன்(பாலய்யா), உமா மஹேஸ்வரி உள்பட 12 பிள்ளைகள் உள்ளன. அதில் 4 வது மகளான உமா மஹேஸ்வரி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்துஉமா மகேஸ்வரி சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் இறப்பு பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

telungana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe