Late Flight; Passengers who took rest on the runway

Advertisment

டெல்லில் இருந்துகோவாவிற்குசென்ற விமானம் தாமதமாக சென்ற நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் விமானத்தின் அருகேயே கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தியதோடு, விமான ஓடுதள பாதையின் அருகே ரெஸ்ட் எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன்அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.