bjp

Advertisment

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்தநிலையில்அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற இராணுவவீரருமானகர்னல் விஜய் ராவத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்துள்ள விஜய் ராவத், அதுதொடர்பாக கூறுகையில், "எனது தந்தை ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இருந்தார். இப்போது எனக்குவாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கும் சிந்தனையும் மிகவும் புத்திசாலித்தனமானது மற்றும் எதிர்காலம் சார்ந்தது" என கூறியுள்ளார்.