zdxv

Advertisment

மருத்துவத்துறையில் வேகமாக முன்னேறி வரும் இந்தியா அதே போல நோய் தாக்கத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கம் இந்தியா முழுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றோடு சேர்ந்து உறுப்புகள் செயலிழப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 8,000 முதல் 10,000 வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்,மற்றும் 1,800 முதல் 2,000 வரை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2017ல் 339 இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.