கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் 40 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரளா முழுவதும் தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டு, மக்கள் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வயநாட்டின் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவால் 40 பேர் மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.