Advertisment

சிக்கிமில் நிலச்சரிவு; 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Landslide in Sikkim; 3 army personnel lost his life

சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 9 பேரைக் காணவில்லை என்றும் தகவலும் கிடைத்துள்ளது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக குவஹாத்தி பாதுகாப்புத் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரி பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், “வடக்கு சிக்கிமின் சாட்டனில் நேற்று (01.06.2025) இரவு 07:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு அருகில் இருந்த மக்களின் வாழ்விடத்தையும், ராணுவ முகாம்களையும் சேதப்படுத்தியது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஹவால்தார் லக்பிந்தர் சிங், லான்ஸ் நாயக் மினிஷ் தாக்கூர் மற்றும் போர்ட்டர் அபிஷேக் லகாடா ஆகிய 4 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவர்களை அடையாளம் காணும் செயல்முறை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதே சமயம் காணாமல் போன 6 பணியாளர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கு மீட்புக் குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். சிக்கிமில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு ராணுவ முகாம் உள்ளிட்ட மக்கள் வாழிடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

indian army landslide sikkim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe