KERALA

Advertisment

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கிய80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல் அந்த குடியிருப்பில் இருந்தவர்களில் சிலர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.