Advertisment

அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!!!

landslide in assam

அசாம் மாநிலத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

அசாமில் கடந்த 2 நாட்களாககனமழை பெய்து வரும் சூழலில், தெற்கு அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். பராக் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் கச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கச்சாரில் 7 பேரும், ஹைலகண்டியில் 7 பேரும், கரிம்கஞ்சில் 6 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். ஏற்கனவே அம்மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக சுமார் மூன்று லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவரும் சூழலில், நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நிலச்சரிவுகளைதொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Assam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe