நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் வாக்குச்சாவடி அருகே திடீரென குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நக்சல்கள் நடமாட்டமே தினம் உள்ள அப்பதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
வாக்குப்பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு...
Advertisment