முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர். தனது மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்க ஐந்து நாட்கள் பரோல் கேட்டிருந்தார், ஆனால் மூன்று நாட்களுக்குதான் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னாள் முதல்வரின் திருமணம் என்பதால் அவர்களின் தொண்டர்கள் பேனர்களெல்லாம் வைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1 copy_6.jpg)
அதுமட்டுமல்லாமல் எந்த அளவிற்கு புது மண ஜோடிகளை எண்ணியுள்ளனர் என்றால் மணமக்களை சிவன், பார்வதிபோல் கிராஃபிக்ஸ் செய்து சிவன் முகத்தில் மணமகனையும், பார்வதி முகத்தில் மணமகளின் முகத்தையும் பொறுத்தி பேனர் வைத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)