Lalu Prasad's son admitted to hospital

லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோன்று மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Advertisment

இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர் ஆவார். இந்நிலையில் நெஞ்சு வலியால் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.