ADVERTISEMENT

லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டு சிறை - ஐந்தாவது வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

02:57 PM Feb 21, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஏற்கனவே முதல் நான்கு வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், நான்கு வழக்குகளிலும் சேர்த்து மொத்தமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளுக்கும் எதிராகவும் மேல்முறையீடு செய்துள்ள லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்று சிறைக்கு வெளியே இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 15 ஆம் தேதி மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது மற்றும் இறுதி வழக்கான டொராண்டா கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக 139.35 கோடி எடுக்கப்பட்ட வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 60 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 74 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இந்த வழக்கில், 35 பேருக்கு கடந்த 15 ஆம் தேதியே தண்டனையை அறிவித்த சிபிஐ நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட 40 பேருக்கு இன்று தண்டனையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT