lalu prasad yadav 73 rd birthday celebrations without social distancing

Advertisment

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் 73 ஆவது பிறந்த தினத்தை அவரது கட்சித்தொண்டர்கள் இன்று கொண்டாடிய நிலையில், இந்தக் கொண்டாட்டங்களில் பல இடங்களில் சமூக இடைவெளி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனசர்ச்சை எழுந்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் 73 ஆவது பிறந்தநாளை அவரது கட்சித் தொண்டர்கள் இன்று விமரிசையாகக் கொண்டாடினர். அதேபோல தேஜ் பிரதாப் யாதவ் தனது தந்தை லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளில் பாட்னாவில் உள்ள ஒரு கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டு சிறப்பு வழிபாடுகளைச் செய்தார். இந்த பூஜை நடைபெற்றபோது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனச் சர்ச்சை எழுந்த நிலையில், இதேபோல மாநிலத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அன்னதான நிகழ்வுகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது தற்போது கடுமையான விமர்சனங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.