Advertisment

லாலு பிரசாத் யாதவின் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய ஐஸ்வர்யா ராய்! வைரலாகும் புகைப்படம்!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் இவருடைய மனைவி ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ சந்திரகா ராயின் மகள் தான் ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆன சில மாதங்களில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களது கணவன், மனைவி வாழ்க்கை 6 மாதம் கூட நிலைக்காத நிலையில், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அனுகினார் தேஜ் பிரதாப். ஆனால் இரண்டு குடும்பத்தினரும் இவர்களை ஒன்றாக வாழ வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Advertisment

politics

politics

politics

இதனால் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் தேஜ் பிரதாப்க்கும் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் வீடிலேயே தங்கி வந்தார். இந்நிலையில் திடிரென்று ஐஸ்வர்யா ராய் கையில் சூட்கேஸுடன் கதறி அழுதபடி லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் தேஜ் பிரதாப் பற்றி புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்று குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் தேஜ் பிரதாப் சிவன் போல் வேடமிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்படத்தக்கது.

Advertisment
problem wife husband aishwaryarai Lalu prasad yadhav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe