Skip to main content

லாலு பிரசாத் யாதவின் வீட்டிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய ஐஸ்வர்யா ராய்! வைரலாகும் புகைப்படம்!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்  இவருடைய மனைவி ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ சந்திரகா ராயின் மகள் தான் ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆன சில மாதங்களில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களது கணவன், மனைவி வாழ்க்கை  6 மாதம் கூட நிலைக்காத நிலையில், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அனுகினார் தேஜ் பிரதாப். ஆனால் இரண்டு குடும்பத்தினரும் இவர்களை ஒன்றாக வாழ வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 
 

politics


 

politics


 

politics



இதனால் ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் தேஜ் பிரதாப்க்கும் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் வீடிலேயே தங்கி வந்தார். இந்நிலையில் திடிரென்று ஐஸ்வர்யா ராய் கையில் சூட்கேஸுடன் கதறி அழுதபடி லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் தேஜ் பிரதாப் பற்றி  புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்று குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் தேஜ் பிரதாப் சிவன் போல் வேடமிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்படத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

லாலு பிரசாத்தை கைது செய்ய உத்தரவு; ம.பி. நீதிமன்றம் அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 MP Court action on Order to arrest Lalu Prasad

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த 1995 ஆண்டு 1997ஆம் ஆண்டு வரை பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். 

லாலு பிரசாத் யாதவின் ஆட்சி காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், இது தொடர்பான வழக்கு குவாலியர் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், இந்த வழக்கு விசாரணைக்கு லாலு பிரசாத் யாதவ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.