/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdsddsdd.jpg)
மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
85 வயதான டான்டன் கடந்த ஜூன் மாதம் லக்னோவில் சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து கடந்த ஜூன் 11 அன்று அவர் வென்டிலேட்டர் அறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்ததாக அவரது மகன் அசுதோஷ் டான்டன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தங்கள் இறுதி மரியாதையை வீட்டிலிருந்தபடியே செலுத்தவும் என அசுதோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். டான்டன் இறப்புக்குப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டான்டன் அவர்கள் சமூகத்துக்காகச் செய்த இடையறா உழைப்புக்காக எப்போதும் நினைவுகூறப்படுவர். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்தியதில் அவரது பங்களிப்பு ஏராளம். சிறந்த நிர்வாகியாக முத்திரைப் பதித்தவர் மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர். இவரது மறைவு வருத்தத்தில் ஆழ்த்துகிறது. அரசியல் அமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் லால்ஜி. அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் லால்ஜி" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)