ADVERTISEMENT

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!

06:25 PM Aug 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யு.யு.லலித் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்து வரும் நவம்பர் 8- ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1957- ஆம் ஆண்டு பிறந்த யு.யு.லலித் 1983- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT