YU Lalit appointed as the Chief Justice of the Supreme Court!

உச்சநீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யு.யு.லலித் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்து வரும் நவம்பர் 8- ஆம் தேதி அன்று பணி ஓய்வுபெறுகிறார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1957- ஆம் ஆண்டு பிறந்த யு.யு.லலித் 1983- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.