Advertisment

சபரிமலைக்கு சென்ற பெண்...பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இடமாற்றம்... 

rehna

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், போலீஸ் பாதுகாப்புடன் ரெஹ்னா பாத்திமா என்ற பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்ய இருந்தார். சன்னிதானம் அருகில் சென்றவர் பக்தர்களின் தொடர் போராட்டத்தால் பம்பைக்கே திரும்பி அனுப்பபட்டார்.

Advertisment

ரெஹ்னா கேரளாவில் மாடலிங் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் சபரிமலைக்கு சென்றதை அடுத்து, பிஎஸ்என்எல் சமூக வலைதள பக்கத்தில் ரெஹ்னா பாத்திமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதன் பின்னர், அவர் தற்போது பணி புரிந்துகொண்டிருந்த கொச்சி போர்ட்ஜெட்டி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து ரவிபுரம் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதை பற்றி ரெஹ்னா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும்போது, இது ஐயப்பனின் கருணையால் தனக்கு கிடைத்த மாற்றம் என்றார்.

இந்நிலையில், மீண்டும் ரெஹ்னா பாத்திமா பாலாரிவட்டம் என்னும் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

rehna fathima sabarimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe