Skip to main content

பெண் வழக்கறிஞரை நேரலை நிகழ்ச்சியில் அறைந்த மவுலானா(வீடியோ)

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 

maulana

 

 

 

 

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை விவாத நிகழ்ச்சியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அந்த விவாத நிகழ்ச்சியில் மவுலானா இஜாஸ் கஸ்மி என்பவர் முத்தலாக்கிற்கு ஆதரவாக கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் முத்தலாக்கிற்கு எதிராக பராஹ் பைஸ் என்ற பெண் வழக்கறிஞர் கலந்துகொண்டு விவாதித்தார். அப்போது பெண் வழக்கறிஞர்," குரானில் முத்தலாக்  என்ற ஒன்று விவாதத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது அல்ல"  என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நேரலை நிகழ்ச்சியிலேயே ஏற்பட, கடைசியில் சண்டை ஏற்பட்டது. பெண் வழக்கறிஞர் முதலில் மவுலானவை அறைய, பின்னர் மவுலானா அந்த பெண் வழக்கறிஞரின் கன்னத்தில் அறைந்தார்.

 

 

 

இதுதொடர்பாக அந்த தனியார் நிகழ்ச்சி அளித்த புகாரின் பேரில் மவுலானவை காவலர்கள் கைது செய்துள்ளனர். தற்போது அந்த நேரலை விவாத நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவிடுவருபவர்கள். முதலில் மவுலானவை அந்த பெண் வழக்கறிஞர் தான் தாக்குகிறார் என்றும் கண்டிக்கின்றனர்.

 

இந்த வீடியோ காட்சி தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பலர் மவுலானாவின் செயலை கண்டித்து வருகின்றனர். சிலர் அந்த பெண்தான் அடிக்க தொடங்கியுள்ளார் என்றும் விமர்சிக்கின்றனர்.      

 

 

          

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையிடம்  முத்தலாக் கூறிய கணவர்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The husband said triple talaq to the teacher in front of the students

 

உத்தர பிரதேசம் மாநிலம், பெரோஷா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த தமன்னாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்தில் முகமது ஷகீர் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால், தமன்னா பாராபங்கியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

 

இந்த நிலையில், தமன்னாவின் கணவர் முகமது ஷகீர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், தமன்னா பாராபங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய முகமது ஷகீர் தமன்னாவின் சொந்த ஊரான பாராபங்கிக்கு சென்றார். அதன் பின்னர், முகமது ஷகீர் தமன்னாவுடன் 6 நாள்கள் தங்கிவிட்டு தனது சொந்த ஊரான பெரோஷாவுக்கு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முகமது ஷகீர் மீண்டும் தனது மனைவியை தேடி பாராபங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது தமன்னா வீட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. மேலும், தமன்னா பணிக்காக பள்ளிக்கு சென்றுள்ளதாக தமன்னாவின் தாயின் மூலம் தெரிந்துகொண்டார். அதனால், முகமது ஷகீர் தமன்னா பணிபுரியும் பள்ளிக்கு சென்றார். அங்கு தமன்னா வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். நேரடியாக வகுப்பறைக்கு சென்ற முகமது ஷகீர், தமன்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் தமன்னாவிடம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

 

இதுகுறித்து, தமன்னா கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முகமது ஷகீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

முத்தலாக்... முதல் வழக்கு... 6 பேர் மீது பாய்ந்தது

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

மத்திய அரசு முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பியது. எதிர்ப்புகளை மீறி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்தலாக்கின் முதல் வழக்கு புதுக்கோட்டையில் பதிவாகி உள்ளது.
 
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 1 ம் வீதியை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா. இவரது மனைவி ரிஸ்வானா பேகம்(25). இவர்களுக்கு கடந்த 30.1.2017 அன்று க்ரீன் பேலஸ் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் தங்க நகை, ரூ 1 லட்சம் பணம் சீர்வரிசைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சஹர்லினா (எ) சஹ்ரா பானு என்ற 2 வயதில் மகள் உள்ளார்.

 

 Muthalak .. First case ..  on 6 people

 

இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிப்ரவரி முதல் நாளில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 ந் தேதி  புதுக்கோட்டை பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிட்டவில்லை. அதனால்  கணவர் சாலையில் வைத்து முத்தலாக் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்றும் விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாமனார் , மாமியார் நாத்தனார், மூத்த மருமகள் உள்பட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் ஷேக்அப்துல்லா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம் வந்தபோதும் முதல் வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில்தான் பதிவானது அதேபோல முத்தலாக் சட்டத்தின் முதல் வழக்கும் புதுக்கோட்டையில் தான் பதிவாகி உள்ளது.