ஐதராபாத்தில் ரூ.17.6 லட்சத்திற்கு லட்டு ஒன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

Advertisment

laddu auction hyderabad

ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கு அங்குள்ள விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலத்தில் விடப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்த லட்டு ஏலம் விடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்த ஏலத்தில் 21 கிலோ எடையுள்ள இந்த லட்டுவை ஏலம் எடுக்க ஏராளமானோர் போட்டிப் போட்டனர்.

Advertisment

இறுதியில், கோலன் ராம் ரெட்டி என்பவர், 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இவர் இதுபோல லட்டினை ஏலத்தில் எடுப்பது இது 9 ஆவது முறை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.