Advertisment

ஆசிரியர்கள் பற்றாக்குறை... வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் ஆர்ப்பாட்டம்

Lack of teachers in pondicherry government

Advertisment

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது என்.கே.சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவிகளுக்கும் சேர்த்து பாடம் எடுப்பதால், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் போதுமான அளவிற்கு வகுப்புகள் எடுக்கவில்லை என்றும், அதிகளவு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் அவர்கள் அடிக்கடி மாணவிகளை கடிந்து கொள்வதாகவும் கூறி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இரண்டு பள்ளி மாணவிகளுக்கும் ஒருங்கிணைத்து பாடம் எடுப்பதால் போதுமான இடவசதி மற்றும் கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்படுவதாகவும் புகார் அளித்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe