bjp

மத்திய அரசும், பிரதமர் மோடியும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உபேந்திரா குஷ்வாகா ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய லோக் ஷக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி பிஹாரில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதிஷ்குமாருடன் இணைந்து என்னையும், எனது கட்சியையும் அழிக்க பார்க்கின்றனர் எனவே பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுகிறேன் என கூறினார்.

Advertisment

இவரின் ராஜினாமா கடிதத்தில், 55 மாதங்களாக இந்த அரசுடன் செயலாற்றியுள்ளேன், இதன் நடவடிக்கைகள் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது, நான் ஏமாற்றப்பட்டுளேன். இந்த அரசு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளுக்கும், அரசு அமைந்த பின்னரான அதன் நடவடிக்கைகளுக்கும் மிகப்பெரிய முரண் உள்ளது. எனவே இந்த பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment