உத்தரபிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில்நடைபெற்று வந்த கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது.

fdgdfgdf

Advertisment

இதில் மஹா சிவராத்திரியான நேற்று மட்டும் சுமார் 1 கோடி பேர் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளாவில் இதுவரை 22 கோடி பேர் புனித நீராடியதாகவும், இதன் ஏற்பாடுகளுக்காக அரசு 4,200 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கும்பமேளா நிகழ்ச்சியில் 3 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகமான போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை, உலகின் மிகப்பெரிய ஓவியப்போட்டி, மிகப்பெரிய துப்புரவு மற்றும் கழிவு அகற்றும் திட்டம் ஆகிய மூன்றிலும் இந்த கும்பமேளா கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக உ.பி மாநில கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment