மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு பிறகு கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

Advertisment

kumarasmy meets party workers

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மஜக மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தன. மஜக கட்சியின் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இந்த கூட்டணியில் மந்திரி பதவி கிடைக்காத ஒரு சிலர் அதிருப்தியில் இருந்து வந்தாலும், அதனை சமாளித்து அரசு இயங்கி வந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில்பாஜகவின் வெற்றிக்கு பின்னர், இந்த கூட்டணியில் இருந்து சில எம்.எல்.ஏ க்கள் பாஜக முக்கிய தலைவரான கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.