Skip to main content

ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்; ராகுலுக்கு ஆதரவு அளித்த மற்றொரு கட்சி தலைவர்...

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

fgbgfb f

 

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கடந்த மாதம் முன்மொழிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது கர்நாடக முதல்வரான குமாரசாமியும் ராகுல் பிரதமராக வர வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி மேலும் பேசிய அவர், 'பல மாநில தலைவர்கள் எங்கள் கூட்டணியில் இருந்தாலும் ராகுல் பிரதமராக வர வேண்டும் என எங்கள் கட்சி விரும்புகிறது. ராகுல் அனுபவமுள்ள அரசியல்வாதியாக மாறியுள்ளார். தற்போதைய பிரதமர் மோடியை எதிர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. மேலும் அவர் நாட்டை சிறப்பாக வழிநடத்துவார். பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார், ட்வீட் போடுகிறார் ஆனால் நாட்டு வளர்ச்சியில் நான்கு ஆண்டுகளில் அவர் என்ன சாதித்துள்ளார் என கேள்வியெழுப்பியுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்