விரைவில் திறக்கப்படுகிறதா காவிரி நீர்??? சோகமாக பேட்டியளித்த குமாரசாமி!!!

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அண்மையில் ஒரு பேட்டியளித்தார். அதில் காவிரி நீரை திறக்கவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

kumarasamy

கர்நாடக, மண்டியா, அகலயா கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(45) என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தனது இறுதிச்சடங்கில் முதல்வர் குமாரசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிந்த குமாரசாமி, தற்கொலை செய்து கொண்ட சுரேசின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்குஆறுதல் கூறினார்.

அதற்குபிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியது, நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். நாம் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், கோர்ட் போன்றவைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம்தான் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

cauvery Cauvery management board karnataka kumarasamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe