Advertisment

குமாரசாமியின் அதிரடி அறிவிப்பால் பயந்து போன பாஜக! கர்நாடக அரசியலில் பரபரப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தனர். அதே போல் கர்நாடக ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகலை எம்.எல்.ஏக்கள் வழங்கின. மேலும் எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரை கேட்டுக்கொண்டன. இதனால் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு உதவும் விதமாக சபாநாயகர் ரமேஷ் குமார் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

Advertisment

karnataka

மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் 17 ஆம் தேதிக்குள் நேரில் என்னிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை, சட்ட சபையில் பேசிய முதல்வர் குமாரசாமி, நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களால், தான், அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கு நேரம் ஒதுக்கி தரும்படி திடீரென ஒரு கோரிக்கையை சபாநாயகர் முன்னிலையில் வைத்தார். இவர் இப்படி பேசியவுடன் பாஜக வட்டாரங்கள் அதிர்சியில் உள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி நிரூபிக்க தயார் என்று பேசியதும் எடியூரப்பா சட்டசபைக்கு வெளியே வந்து பாஜக எம்.எல்.ஏ.க்களிடமும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடமும் பேசியதாக தெரிகிறது. பின்பு குமாரசாமி இப்படி பேசியதற்கு பின்பு எதும் அரசியல் இருக்கிறதா என்று பெரிய குழப்பத்துடன் பாஜகவினர் இருப்பதாக சொல்கின்றனர்.

இது பற்றி விசாரித்த போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்று குமாரசாமி நம்பிக்கையோடு இருப்பதாகவும், அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியான எடியூரப்பா, இன்று மாலையே பாஜக எம்எல்ஏக்கள் அனைவரையும் வேறு ரிசார்ட்டுக்கு மாற்றுகிறார். இன்று மாலை 4.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பாவிடம், நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க ஆசைப்பட்டனர் அதனால் அனைவரையும் ஒரே இடத்தில இருக்க வைக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் சட்டசபைக்கு திங்கள்கிழமை காலை வருவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

congress ediyurappa karnataka kumarasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe