நிதி ஆயோக் கூட்டத்திற்காக அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி சென்றிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தனர்.

Advertisment

kumarasamy and edapadi palanisamy in jalsakthi meeting

மத்திய அமைச்சரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

Advertisment

இந்நிலையில் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளோ, சட்டமோ இல்லை. காவிரியின் குறுக்கே எந்த ஒரு புதிய அணையையும் அமைக்க கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அணைகட்ட அனுமதி தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.