Kudos to Elon Musk's photo

எலான் மஸ்க்கின் புகைப்படத்தை வைத்து ஆண்களுக்கு ஆதரவான அமைப்பினர் பூஜை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்எந்த அளவுக்கு புகழ்பெற்றவரோஅதே அளவு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவர்எப்போதும் மக்கள் மத்தியில் பேசப்படும் நபராகவே கருதப்படுவார். உக்ரைன் போரின்போதுரஷ்ய அதிபர் புதினை சண்டைக்கு அழைத்தது;உடனே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவித்தது.கொரோனா குறித்து திகில் கருத்து கூறியது என பணத்தோடு சேர்ந்து ஏகப்பட்ட எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார் எலான் மஸ்க்.

Advertisment

இப்படி ட்விட்டரில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்த எலான் மஸ்க், திடீரென 44 பில்லியன் டாலருக்கு அந்த ட்விட்டர் நிறுவனத்தையே வாங்கினார். அதன்பிறகுஅதிகமான இந்தியர்கள் ட்விட்டரிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் ட்விட்டர் சிஇஓ அகர்வால் உள்ளிட்ட பல ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். எலான் மஸ்க்கின் இத்தகைய செயல்களுக்குஉலகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.இந்நிலையில், பெங்களூரில் உள்ள ‘சேவ் இந்தியா ஃபேமிலிஃபவுண்டேஷன்’(save india family foundation) என்கிற அமைப்பு, எலான் மஸ்க்கிற்கு பேனர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை வைத்துபூஜையும் செய்துள்ளனர்.

பொதுவாக, இந்த அமைப்பு என்பது ஆண்களுக்கு ஆதரவான அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆண்களுக்கு ஆதரவு தெரிவித்தும்பெண்களைக் கண்டித்தும் பல்வேறு பதிவுகளைப் போடுவார்கள். இதுகடந்த காலத்தில் அத்தகைய பதிவுகள் அனைத்தும் தடை செய்யப்படும். ஆனால், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகுஆண்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்க் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிறகும்ஆண் ஆர்வலர்களின் பதிவுகளைத்தடை செய்யவில்லை. இதையடுத்துஇந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எலான் மஸ்க்கின் புகைப்படத்திற்கு ஊது பத்திகள் ஏற்றிமந்திரங்கள் சொல்லி பூஜை செய்யும் வீடியோ காட்சிசோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

- சிவாஜி