Advertisment

’நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன்; அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார்’-நடிகரின் பரபரப்பு புகார்

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக நடிகர் கோட்டி, வினுகொண்டா போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததற்கான ஆதாரங்களாக லட்சுமி பார்வதி தனக்கு அனுப்பியது என்று சொல்லி செல்போன் ஸ்கிரீன்ஷாட்களையும், சில படங்களையும் போலீசிடம் அளித்துள்ளார். லட்சுமி பார்வதி மீதான இந்த செக்ஸ் புகார் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

k

கோட்டி என்ற ஆனந்த் பால் போலீசில் அளித்துள்ள புகாரில், ‘’நான் வினுகொண்டா மண்டல் உப்பர் அப்பளம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன்.

Advertisment

கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். அவர் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார். அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறினார்.

நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். இது எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறி உள்ளார்.

சட்ட ஆலோசனை பெற்று முதற்கட்ட விசாரணை நடத்தி அதன்பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Andhra koti lakshmiparavathi NTR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe