நேற்று மாலை கொல்கத்தா வணிக வளாகத்திலுள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து பணங்கள் கட்டுகட்டாக விழுந்ததில் மக்கள் பணமழை பெய்கிறதோ என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் ஹோக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை திடீரென சோதனை நடத்தினர்.

kolkatta

Advertisment

Advertisment

அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்திக்கொண்டிருக்கும்போது, அலுவலக கட்டடத்தின் தளங்களிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வேலை பார்க்கும் ஊழியர்கள் ஜன்னலுக்கு வெளியே வீசியுள்ளனர். சில கட்டுகள் காற்றிலியே பிரிந்து கீழே மழை போல விழுந்தன. அதை பார்த்த மக்கள் கீழே விழுந்த பணங்களை அவசர அவசரமாக எடுத்துச் சென்றனர்.

சிலர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பரப்பினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஊழியர் ஒருவர் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு பணத்தை கட்டுக்கட்டாக வீசுகிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும்போது தெரிய வருகிறது. வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பணத்தை ஊழியர்கள் வெளியே வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.