செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட முழங்கால் மூட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
முழங்கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் எடைக் குறைந்த மூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 1 கிலோ 600 கிராம் மட்டுமே. இந்த செயற்கை முழங்கால் மூட்டை அணிந்தபடி, 100 மீட்டர் தொலைவுக்கு எவ்வித இடையூறுமின்றி எளிமையாக ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.இந்த தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.